TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Group I II IV தமிழக புரட்சிகர தேசியவாதிகள் : வ.வே.சு.ஐயர் & நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய 10,12 வகுப்பு புதிய மற்றும் பழைய புத்தகங்களின்தொகுப்பு

Group I II IV தமிழக புரட்சிகர தேசியவாதிகள் : வ.வே.சு.ஐயர் & நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய 10,12 வகுப்பு புதிய மற்றும் பழைய புத்தகங்களின்தொகுப்பு

10,12 வகுப்பு புதிய மற்றும் பழைய புத்தகங்களின்தொகுப்பு 

வ. வே. சுப்ரமணிய ஐயர் &
நீலகண்ட பிரம்மச்சாரிவ.வே. சுப்ரமணிய. ஐயர்


* வழக்கறிஞராக திருச்சி, ரங்கூன் ஆகிய இடங்களில் பணிபுரிந்த வ. வே. சு. ஐயர்
பாரிஸ்டர் பட்டம் பெறும் பொருட்டு 1907 ல் லண்டன் சென்றார். 


* அங்கு சியாம்ஜி
கிருஷ்ணவர்மாவோடு தொடர்பு கொண்டார்.


* அவரது " இந்தியா இல்லம்” இந்திய
மாணவர்களின் புரட்சி பாசறையாக விளங்கியது. 


* அங்கு அவர் காமா அம்மையார்,
வீரசாவர்க்கார் ஆகிய புரட்சியாளர் களோடு தொடர்பு கொண்டதன் காரணமாக ஆயுதப்
புரட்சி வீரராக மாறினார் . 


* மதன்லால் திங்ராவின் வீரசாகசம் அவரை பெரிதும் கவர்ந்தது.


* கர்சான்வைலி கொலைக்குப்பின் "இந்தியா இல்லம் " பிரிட்டிஷ் புலனாய்வு துறையினர்
கண்காணிப்பிற்குள்ளானது. 


* சவார்க்கார் கைதுசெய்யப்பட்டபின் ஐயர் மாறு வேடம் பூண்டு
இந்தியா திரும்பி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். 


* புதுச்சேரியில் அவர் பாரதியார், வ.உ.சி
போன்ற தேச பக்தர்களுடன் தொடர்பு கொண்டார். இங்கு தான் அவர் வாஞ்சி நாதனைச்
சந்தித்தார். 


* அவருக்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார். இதைத்தவிர ஆஷ்
கொலை வழக்கில் அவருக்கு வேறு எந்தவிதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.


* புதுவையில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கும் அரியதொரு பணியை ஆற்றி முடித்தார் .


* 1920-ல் அரசியல்
கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப் பட்டபின் இந்தியா திரும்பினார். அச்சமயத்தில்
காந்தியடிகளால் வேல்ஸ் இளவரசர் தொடங்கப்பட்ட வருகைக்கு ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவளித்தார்.


* பங்கு பெற்றார்.
அச்சமயத்தில் தேசபக்தன்' என்ற நாளிதழின் எதிர்ப்புத் ஆசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார்.
அவ்விதழில் அவர் எழுதிய தலையங்கம் அரச நிந்தனை புரிவதாக இருக்கிறது என்று
குற்றம்சாட்டப்பட்டு ஒன்பது மாத
சிறைத்தண்டனையளிக்கப்பட்டார்.


* விடுதலைக்குப்பின் 1922-ல் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சேரன்மகாதேவி என்ற
ஊரில் பண்டைய குருகுலக கல்வியைப் புதுப்பிக்கும் வகையில் ' பரத்துவாஜ ஆஸ்ரமம்'
ஒன்றை அமைத்தார்.


* ' பால பாரதம்' என்ற இலக்கிய ஏட்டையும் வெளியிட்டார்.


* தாய்மொழியில் கல்வி அளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆஸ்ரமத்திற்கு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிதி உதவி வழங்கியது.


* அவ்வாஸ்ரமத்தில் அந்தணர்,
அந்தனரல்லாத குழந்தைகளுக்கு தனித்தனியே உணவு சமைத்து வழங்கப்பட்டதை
காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களான ஈ.வெ.ராமசாமி, வரதராஜூலு நாயுடு
ஆகியோர் எதிர்த்தனர். 


* அவ்வெதிர்ப்பை காங்கிரஸ் புறக்கணித்ததால் ஈ.வே.ரா. காங்கிரஸ்
கட்சியைவிட்டு விலக நேரிட்டது. 


* சாதி வேறுபாடுகளை வெறுத்த ஐயர் தனிப்பட்ட
வாழ்வில் அந்தணரல்லாதாரோடு அமர்ந்து உணவு உண்ணும் வழக்கத்தை
கடைப்பிடிப்பவராயினும், அந்தணப் பெற்றோர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கும்
பொருட்டே தனித்தனி உணவு முறையை கடைப் பிடித்ததாக விளக்கமளித்தார். 


* எனினும்
அது சாதி வேறுபாடுகளை ஊக்குவிப்பதாக அமைந்ததால் அம்முறை அவர் புகழுக்கு
களங்கம் விளைவிப்பதாகவே இருந்ததுநீலகண்ட பிரம்மச்சாரி


* ஆஷ் கொலை வழக்கு சார்ந்த திருநெல்வேலி சதிவழக்கின் முதல் குற்றவாளி நீலகண்ட
பிரம்மச்சாரி, ஒரு புரட்சி வீரராக, பொது உடமைவாதியாக, ஆன்மீக ஞானியாக வாழ்ந்த
தேசபக்தர் ஆவர்.


* அவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்குமூலத்திலிருந்து தென்காசியில்
சிதம்பரம் பிள்ளை என்பார் இல்லத்தில் தம்மைப் போன்று புரட்சிக் கருத்துக்
கொண்டவர்களோடு இணைந்து ஒரு சங்கத்தை நிறுவியதாகத் தெரிகிறது.


* அச்சங்கம் (1904)
தான் ' பாரத மாதா சங்கம்' என்ற ரகசிய புரட்சி நிறுவனமாயிருக்கலாம் எனக்
கருதப்படுகிறது. 


* அச்சங்க உறுப்பினர்கள் நாட்டு விடுதலைக்காக தங்கள் உடல்,
பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணிக்க தயாராய் இருப்பதாக காளிக்கு பூஜை
செய்து உறுதிமொழி கொடுத்து, அந்த உறுதி மொழியில் இரத்தக் கையெழுத்திட்டனர்.


* ஆனால் ஆஷ் கொலைக்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர்
மறுத்துள்ளார் .


* தமது ' இந்திய சுதந்திரப் போர்' என்ற நூலில் நாட்டுவிடுதலைக்கு ஆயுதப்
புரட்சிதான் உரியவழி என்று உறுதி கொண்டோமேயன்றி, தனிப்பட்ட ஆங்கிலேயர்களை
கொலை செய்யத் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார், வ.வே.சு: ஆஷ்
துரையைச் சுட்டுக் கொல்வதற்கு வாஞ்சிநாதனை தூண்டிவிட்டது ஐயர்தான் துப்பாக்கி சுடும்
பயிற்சியை அளித்தவர் என்றும், அக்கொலை நடைபெறும்போது தாம் காசியில்
இருந்ததாகவும் அந்நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


* எனினும் அச்சதி வழக்கில் ஏழாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டார்.


* அவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தன்டனை பெற்ற பலர் தண்டனையை ரத்து செய்யக் கோரி
மேல் முறையீடு செய்தபோது பிரம்மச்சாரி அவ்வாறு செய்யாதது குறிப் பிடத்தக்கது.


* அவர்
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உடல் வாடினாலும் உள்ளம்
விடுதலைப் போர் நட வடிக்கைகளிலே ஈடுபட்டிருந்தது.


* 1914 -1916 முதல் உலகப்போர் தோன்றியதை அறிந்த அவர் போர் சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரிட்டனின் எதிரி நாடுகளுடன் தொடர்பு கொண்டு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று அவர் உள்ளம் துடித்தது இதனால் சிறையிலிருந்து தப்பினார் 


* ஆனால் இரண்டு நாட்களுக்குள் தர்மாவரம் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்


* சிறையிலிருந்து 1919இல் விடுதலை செய்யப்பட்ட நீலகண்ட பிரம்மச்சாரி பொதுவுடமைவாதிகள் வெளியே வந்தார்

* வர்க்கப் புரட்சிக்கு மக்களை தூண்டியதாக மீண்டும் கைது செய்யப்பட்டு 1922இல் 10 ஆண்டுகள் வந்து சிறை தண்டனை அளிக்கப்பட்டு மாண்டு கோமரி ,முல்தான், ரங்கூன் சிறைகளில் அடைக்கப்பட்டார்.


* பத்தாண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்றபோது ஆன்மீக ஞானியாக வெளிவந்தார்.


* அதன்பின் அரசியலில் அவர் ஈடுபடவில்லை நந்தி மலை என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து இறுதி நாள்வரை ஞானி ஆகவே வாழ்ந்தார் தனது 88 வயதில் 1978இல் மரணமடைந்தார்.


Post a Comment