TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 10th New Book Important வினா விடைகள்

10th New Book Important வினா விடைகள்

10th New Book  Important  வினா விடைகள்

1. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் ____ ஆண்டு ___ மாதம் தொடங்கப்பட்டது.

விடை : 1985 ஏப்ரல்

2. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் காணப்படும் வேளாண்மை முறை ________.

விடை : தோட்ட வேளாண்மை

3. இந்தியா ____ ஆம் ஆண்டை திணைப் பயிர்களின் தேசிய ஆண்டாக அறிவித்தது.

விடை : 2018

4. இந்தியாவில் _______ 'ஏழை மக்களின் பசு' என்றழைக்கள்படுகிறது

விடை : வெள்ளாடுகள்

5. _____ அணையில் பெரும் எண்ணிக்கையிலான சதுப்பு நில முதலைகள் (சீங்கன்னி) காணப்படுகின்றன.

விடை : அமராவதி அணை

6. 'கரையார் அணை' என்றழைக்கப்படும் அணை ?

விடை : பாபநாசம் அணை

7. ____ தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது.

விடை : கரூர்

8. 2011 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு __ ஆகும்.

விடை : 555

9. தமிழ்நாட்டின் __ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

விடை : நான்கு

10. பேரிடர் அவசர கால தொலைபேசி எண் ____.

விடை : 1077

11. MOIL நிறுவனத்தின் தலைமை இடம் எது?

விடை :நாக்பூர்

12. பாக்சைட் என்பது எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?

விடை: லீ பாக்ஸ்

13. Coal india நிறுவனத்தின் தலைமை இடம் எது?

விடை :கல்கத்தா

14. நாட்டின் மிக பழமையான எண்ணெய் வயல் எது?

விடை :திக்பாய் எண்ணெய் வயல்

15. NHPC நிறுவனம் அமைந்துள்ள இடம்?

விடை: பரிதாபாத்

16. காற்றாலை திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்?

விடை :நான்கு

17. விழுஞ்சத்தில் நிறுவப்பட்டுள்ள ஓத அலை சக்தி ஆலையின் திறன் எவ்வளவு?

விடை: 150KW

18. பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

விடை: கர்நாடகா

19. இந்தியாவில் காகிதம் உற்பத்தி செய்யும் முதன்மையான மாநிலம் எது?

விடை :மேற்கு வங்கம்

20. தெற்காசியாவின் டெட்ராய்ட் எது---------?

விடை: சென்னை

21.புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் --------எனப்படும்.

*விடை : நிறை எண்*

22.கார்பன் நிறை எண் --------?

*விடை : 12*

23.சல்பர் நிறை எண் ---------?

*விடை : 32*

24.ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை ----------?

*விடை : 1கிராம்*

25.நீரின் கிராம் மூலக்கூறு நிறை --------?

*விடை : 18 கிராம்*

26.மூலக்கூறுகளில் வேதிப்பிணைப்பு (உண்டா /இல்லையா) --------?

*விடை : உண்டு*

27.அவகோட்ரா எண்ணின் மதிப்பு ---------?

*விடை : 6.023× 10 ^23*

28.திட்ட வெப்ப அழுத்தநிலை அளவு -----------?

*விடை : 273.15K*

29.கர்பன் மோனாக்சைடு குறியீடு --------?

*விடை : CO*

30.மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே --------எனப்படும்.

*விடை : அணுக்கட்டு எண்*

31. தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளைகள் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது _____ எனப்படும்.

விடை : நீராவிப்போக்கு

32. இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்க ______ உதவுகிறது.

விடை : நீராவிப்போக்கு

33.நீரானது வேர்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவு __ பகுதியை விட வேர்தூவிகளில் அதிகமாக உள்ளது.

விடை : புறணி

34. சவ்வூடு பரவல் என்பது ____ கடத்தல் நிகழ்ச்சியாகும்.

விடை : ஆற்றல் சாரா கடத்தல்

35. செல்கள் உள்ளே மற்றும் வெளியே பொருட்கள் கடத்தப்படுவது ____ முக்கிய முறைகளில் நடைபெறுகிறது.

விடை : இரண்டு

36. ____ என்பது திரவங்களில் காணப்படும் சிறப்பான பரவுதல் ஆகும்.

விடை : சவ்வூடு பரவல் ( ஆஸ்மாஸிஸ்)

37. ஒரு தாவரசெல்லை ஹைப்பர்டானிக் கரைசலில் வைக்கும்போது செல்லிலிருந்து நீர் வெளியேறுவதால் புரோட்டோபிளாசம் செல் சுவரை விட்டு விலகி சுருங்கி விடுகிறது இதற்கு ___ பெயர்

விடை : பிளாஸ்மா சிதைவு

38. உயிரற்ற தாவரபொருட்கள் நீரினில் வைக்கப்படும் பொழுது நீரினை உறிஞ்சி உப்புகின்ற நிகழ்வு ___ எனப்படும்.

விடை : உள்ளீர்த்தல்

39.வேர்தூவிகள் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு ___ தனித்தனி வழிகளில் செல்கிறது.

விடை : இரண்டு

40.ஒவ்வொரு இலைத்துளையும் ___ காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது

விடை : இரண்டு

41. இயங்குகின்ற பொருள்கள்யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வுநிலைக்கு வந்து சேரும் என்பது யார் கூற்று -------------?

*விடை : அரிஸ்டாட்டில்*

42. நீளம் தண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்குகாக, தாம் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் ------------ற்காண நிலைமம்.

*விடை : இயக்கம்*

43.ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் ----------ர்காண நிலைமம்.

*விடை : திசை*

44. கிளைகளை உலுக்கியபின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்த பின் விழும் பழங்கள் இவையாவும் -----------ற்காண நிலைமம்.

*விடை : ஓய்வு*

45. இயங்கும் பொருளின் நிறை & திசை வேகத்தின் பெருகர்பலன் -------எனப்படும்.

*விடை : உந்தம்*

46. விசையின் SI அலகு ------------?

*விடை : கிகி மீ வி -1*

47. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கம் நேர்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும் என்பது நியூட்டன்னின் எத்தனவது விதி ----------?

*விடை : முதல் விதி*

48. சமன் செய்யப்பட்ட விசையின் தொகுபயன் மதிப்பு ---------?

*விடை : சுழி*

49.விசையின் திருப்பு திறனின் தொகுபயன் மதிப்பு ------------?

*விடை : நியூட்டன் மீட்டர் (Nm)*

50.இரட்டை திருப்புதிறன் CGS அலகு --------?

*விடை : டைன் செ.மீ*

51. *மாறா வெப்பநிலை மற்றும் அழுத்த நிலையில் சமபருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சமஅளவு எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகளை கொண்டிருக்கும்* என்பது ---------தத்துவத்தை குறிக்கிறது.

*விடை : அவகோட்ரா விதி*

52. அவகோட்ரா விதி வெளியிடப்பட்ட ஆண்டு -------?

*விடை : 1811*

53.அவகோட்ரா விதி -------விதியை விவரிக்கிறது.

*விடை : கேலூசுக் - விதி*

54. ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் --------- எனப்படும்.

*விடை : ஐசோடோப்பு*

55. ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ---------- எனப்படும்.

*விடை : ஐசோபார்கள்*

56. சோடியத்தின் நிறை எண் ---------?

*விடை : 23*

57. நைட்ரஜன் கிராம் அணு நிறை ----------?

*விடை : 14 கி*

58. ஆக்ஸிஜன் கிராம் அணு நிறை ----------?

*விடை : 16 கி*

59.HCL ன் கிராம் மூலக்கூறு நிறை ---------?

*விடை : 36.5 கி*

60.மூவணு மூலக்கூறு எடுத்துகாட்டு --------?

*விடை : ஓசோன்*

Post a Comment