TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Unit 8 - தமிழ் மொழி தொன்மை சமூக பண்பாடு

Unit 8 - தமிழ் மொழி தொன்மை சமூக பண்பாடுதமிழ் மொழி- தொன்மை சமூகம்- பண்பாடு:

✓ தமிழகத்தில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான எழுத்துக்களே "தமிழி"எனப்படுகிறது.


✓ வட இந்தியாவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் வழங்கிய எழுத்து "பிராமி "எனப் படுகிறது


✓ தமிழ்நாட்டில் தமிழி எழுத்து கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரையிலான ஏறக்குறைய 600 ஆண்டு காலம் வழங்கி வந்துள்ளது.


✓ தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் பிராமி எழுத்தை போன்று இருப்பதால் ஐ.மகாதேவன் அவர்கள் இதற்கு "தமிழ் பிராமி "என்று பெயர் கொடுத்துள்ளார்.


✓ கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லலிதவிஸ்தாரம் என்ற நூலில் 64 வகையான எழுத்துக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன .இதில் திராவிடிஎன்ற பெயரும் காணப்படுகிறது.


✓ முதன்முதலில் ஓவியங்களே எழுதப்பட்டன. மொகஞ்சதாரோவில் கிடைத்த எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் ஆகும். இவை கி.மு 3000 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.


✓ 1903இல் வெங்கோப ராவ் என்பவர் தான் முதன் முதலில் தமிழகத்தில் "கீழவளவு" என்ற இடத்தில்"தமிழி"எழுத்துகளை கண்டுபிடித்தார்.


✓ 1906 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கெமைடு என்பவர் மறுகால்கலை என்ற இடத்தில் தமிழி எழுத்தை கண்டுபிடித்தார்.


✓ பொதுவாக தமிழி எழுத்துக்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குகைத் தளங்களில் சமணமுனிவர்கள் கற்படுகைகளில் காணப்படுகின்றன.


✓ மொகஞ்சதாரோ ,ஹரப்பா போன்ற பழைய இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் காணப்படும்எழுத்துக்களும் ,சொற்களும் பெரிதும் தமிழ் மொழியைச் சார்ந்தவையே என ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார்.


தமிழ் மொழி- தொன்மை- சமூகம்-பண்பாடு:


#செம்மொழித் தமிழ்"


✓தமிழுக்கு செம்மொழி தகுதி கோரி குரல் கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர்.


✓தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் 12. 10 .2004


✓1887ல் முதன்முதலில் பரிதிமாற்கலைஞர் தன்னுடைய "தமிழ்மொழியின் வரலாறு" என்ற நூலில் தமிழ்மொழி செம்மொழி என குரல் கொடுத்தார்.


✓1886 ஆம் ஆண்டிலேயே கால்டுவெல் அவர்கள் தாம் எழுதிய " திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் "என்ற நூலில் திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்குவது தமிழே என்று எழுதியுள்ளார்.


✓திராவிட மொழிகள் என்ற சொல்லாக்கத்தை உருவாக்கி தந்த கால்டுவெல் அவர்களின் நூல்கள் தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு பூக்கும் அளிப்பதாக அமைந்தன.


✓தமிழ் மற்றும் தமிழர்களின் பண்பாடு பற்றி கால்டுவெல் அவர்கள் பற்று கொண்டதன் காரணமாக இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது சென்னை மெரினா 
கடற்கரையில் அவரது திருவுருவச் சிலையை அறிஞர் அண்ணா அவர்கள் 2.1.1968 அன்று நிறுவினார்.


✓தமிழ்மொழி செழுமையும், தொன்மையையும் மிக்க இலக்கியத்தை கொண்டது. அம்மொழியில்உள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலே ஒரு செம்மொழி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் :தமிழ் செம்மொழியாக இருப்பதற்குரிய தகுதிகள் அனைத்தும் பண்டைய காலத்தைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டவர்= மௌலானா அபுல் கலாம் ஆசாத்.


✓கிரேக்க மொழியுடன் தமிழ்மொழியாளரின் உறவு தொடங்கும் முன்பே தமிழ் மொழி செம்மொழித் தகுதி அடைந்துவிட்டது என்று கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிடுகிறார்.


✓தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை "நன்னெறிமுருகன்" என்று மாற்றிக் கொண்ட மொழியில் பேரறிஞர் டாக்டர் சுனீத் குமார் சாட்டர்ஜி இந்திய பண்பாடு மற்றும் சமயத் தத்துவத்தை பொறுத்தவரையில் திராவிட மொழியே மூல ஙாலாகஉள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


✓கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் 10.01. 2004 அன்று நடைபெற்ற தமிழறிஞர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி 12.01. 2004 அன்றுதொடங்கி ஒரு கோடி கையொப்பம் பெற்று தமிழ் செம்மொழி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


✓7 .6. 2004 ல் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் குடியரசு தலைவர் ,ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் தமிழ் செம்மொழி என பிரகடனப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.


✓ தமிழ் மொழி செந்தமிழ்,முத்தமிழ் வண்தமிழ், கன்னித்தமிழ் என்றெல்லாம் சான்றோரால் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் தமிழ் மொழியின் பழமைக்கும் வளத்திற்கும் சான்றாக உள்ளன.


✓திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு"என தமிழர் வழிபாட்டு நெறிகளை மீட்ருவாக்கம் செய்தார்.

Post a Comment